search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் குற்றச்சாட்டு"

    ஆண்டிப்பட்டி அருகே தலைமை ஆசிரியை மீது மாணவிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து கல்வி அதிகாரி நேரடி விசாரணை நடத்தினார்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புவனேஸ்வரி என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் மீது மாணவ-மாணவிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

    மாணவர்களுக்கான இலவச திட்டங்களை செயல்படுத்துவதிலும் எஸ்.எஸ்.எஸ்., பசுமைப்பணி, என்.எஸ்.எஸ. போன்ற பணிகளுக்காக அரசு வழங்கும் நிதியை பற்றுச்சீட்டு எழுதி தான் செலவழித்துக் கொள்வதாகவும், மாணவர்களிடம் ரூ.200 முதல் ரூ.400 வரை கட்டாய வசூல் செய்வதாகவும், தெரிவித்தனர்.

    இது மட்டுமின்றி பள்ளி வகுப்பை முடித்து செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பு செய்வதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து பள்ளியில் நேரடி விசாரணை நடத்தினார். மாணவ-மாணவிகளிடமும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடமும் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது மாணவிகள் தலைமை ஆசிரியர் மீது தாங்கள் அளித்த புகார் உண்மைதான் என்றும். இவர் ஏற்கனவே பணிபுரிந்த எரசை பள்ளியில் ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் அவரது பதவி காலம் வரும் 31-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஒரு ஆண்டுக்கு பணி நீட்டிப்பு கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இதனை அதிகாரிகள் ஏற்கக்கூடாது. அவர் மீதான புகாருக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
    ×